[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நடைபெறும் விசாரணைகளை மேற்பார்வை செய்யும் சர்வதேச பிரபல்யம் வாய்ந்தவர்கள் குழுவின் தலைவரான முன்னாள் இந்தியப் பிரதம நீதியரசர் பி.என்.பகவதி இலங்கையின் சட்டமா அதிபர் சி.ஆர்.டி சில்வா தெரிவித்த கருத்துகள் குறித்து கடும் ஆட்சேபணை வெளியிட்டுள்ளார். சட்டமா அதிபர் சி.ஆர்.டி சில்வா அவசரமான கருத்துகளைத் தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிபுணர்கள் குழுவின் அறிக்கைகள் குறித்து பி.என்.பகவதி தெரிவித்த கருத்து தொடர்பாகவே சி.ஆர்.டி.சில்வா கருத்துத் தெரிவித்திருந்தார். அவருக்கு தனது கருத்தினை தெரிவிக்க சகல உரிமையும் உள்ளது . நீதிபதி என்ற வகையில் நான் எப்போதும் மாற்றுக் கருத்தை வரவேற்றுள்ளேன் . அது உண்மையை கண்டறிய உதவும் என குறிப்பிட்டுள்ள பகவதி எனினும் அந்த விமர்சனம் உரிய மொழியில் பெறுமதியான மொழியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். அது தூற்றுவதாக அமைந்தால் தவறானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை சட்டமா அதிபர் சர்வதேச நிபுணர்கள் குழுவை விமர்சிப்பது குறித்து நான் கவலையடையவில்லை . நானும் அந்தக் குழுவை சேர்ந்தவன். அது தனிப்பட்ட விடயம் அல்ல நாங்கள் தெரிவித்தது பிழை என கருதினால் அவர் அதனை முறையான கௌரவமான மொழியில் குறிப்பிட வேண்டும் என பகவதி தெரிவித்துள்ளார். பகவதி இலங்கை சட்டமா அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு நான் ஏன் அந்தளவிற்கு இறங்க வேண்டும்? எனக்கு எனது சகாக்களினதும் இலங்கை ஜனாதிபதியினதும் ஆதரவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சுயாதீனமானவர்கள். இதனால், எங்களுக்கு என்ன? நான் சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ளேன் என்றும் பகவதி தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து தான் முழுமையாக ஆராயவில்லை என்றும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் தற்போதே ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் தமது பணி விசாரணைகள் நடைபெறும் விதம் குறித்து மேற்பார்வை செய்வதே என்றும் விசாரணைகளை மேற்கொள்வதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நிபுணர்கள் குழு ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அது சுயாதீனமற்றது சர்வதேச தரத்தினை எட்டாதது என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்த இலங்கை சட்ட மா அதிபர் இது நல் நம்பிக்கையுடன் கூடியதல்ல. அறியாமையைப் பிரதிபலிக்கின்றது எனத் தெரிவித்திருந்தார்.
Sunday, July 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.