Sunday, July 01, 2007

திருமலை மாவிலாறு பகுதியில் 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை.!

[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007] திருகோணமலை மாவிலாறு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நான்கு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு குடும்பிமலை பகுதியிலிருந்து தப்பிவரும் விடுதலைப் புலிகள் மீது கடந்த சில தினங்களாக மாவிலாறு பகுதியில் வைத்து படையினர் தாக்குதல்களை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்த நான்கு முஸ்லிம்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவிலாறு காட்டுப் பகுதியில் விறகு பொறுக்கவும் ஆற்றில் மீன்பிடிக்கவும் சென்றவர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த நான்கு பொது மக்களதும் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் கந்தளாய் ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குடும்பிமலை பகுதியிலிருந்து தப்பிவரும் விடுதலைப்புலிகளே இவர்களை சுட்டுக் கொன்றதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இந்த நால்வரையும் படையினரே அடித்தும், சுட்டும் கொன்றதாக இவர்களுடன் சென்று பின்னர் தப்பி வந்த ஐந்து முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர். இந்த நால்வரில் ஒருவரை படையினர் அடித்தே கொன்றதாகவும் அவர்கள் பி.பி.சி.க்கு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் பொலநறுவை பள்ளியகொடபகுதியைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.