[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007] ஜே.வி.பி.ஆரம்பித்துள்ள `புதிய தேசிய முன்னணியில்' (நவ ஜாதிக பெரமுன) இணைந்துகொள்ள இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அது மட்டுமல்லாது மாகாண சபைகளிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் தங்களது புதிய முன்னணியில் இணையவிருப்பம் தெரிவித்திருப்பதாக ஜே.வி.பி.யின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள பல உறுப்பினர்களும் புதிய முன்னணியில் இணைவதற்கு சம்மதம் வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதேநேரம், ஜே.வி.பி.யின் தலைமையின் கீழ் புதிய தேசிய முன்னணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள 2 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் உட்பட ஏனையவர்களின் விபரங்களை தற்போது வெளியிட வேண்டிய அவசியமில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் சரியான சந்தர்ப்பமொன்றில் அவர்கள் பற்றிய விபரம் வெளியிடப்படுமெனவும் அப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, புதிய தேசிய முன்னணிக்கு அரசியல் உறுப்பினர்களினதும், மக்களினதும் ஆதரவு திரட்டும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறிருக்க, அரசிலிருந்து வெளியேறிச் சென்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினருக்கும், ஜே.வி.பி.யினருக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.தலைமை அலுவலகத்தில் நடைபெற ஏற்பாடகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சந்திப்பொன்றை கோரி ஜே.வி.பி.யினருக்கு எழுதியிருந்த கடிதத்துக்கு அமைவாகவே இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இச் சந்திப்பில் மங்கள சமரவீரவுடன் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியராச்சியும் கலந்துகொள்ளவுள்ளதுடன், ஜே.வி.பி.சார்பில் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவினர் கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Sunday, July 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.