Monday, June 18, 2007

வெள்ளவத்தையில் இன்றும் வர்த்தகர் கடத்தல்.!!

[திங்கட்கிழமை, 18 யூன் 2007] கொழும்பு வெள்ளவத்தையில் வைரம் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஜோன்சன் வேதமாணிக்கம் (வயது 35) இன்று திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள காலி வீதிச் சந்தியில் நெல்சன் வீதி வழியாக வங்கிக்கு சென்று கொண்டிருந்த போது இன்று காலை 9.30 மணியளவில் ஜோன்சன் வேதமாணிக்கம் கடத்தப்பட்டார். உடனே தனது உறவினர் மனோகரனுக்கு செல்லிடப்பேசி மூலம் தான் ஆயுதக் குழுவினரால் கடத்தப்படுவதாக ஜோன்சன் வேதமாணிக்கம் கூறியுள்ளார். இது தொடர்பாக வெள்ளவத்தை சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் கடத்தல் சம்பவங்கள், அனைத்துலக அளவில் கடும் கண்டனங்களுக்குள்ளாகி வரும் நிலையில் தலைநகர் கொழும்பில் கடத்தல் சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.