[திங்கட்கிழமை, 18 யூன் 2007] ஹிட்லரைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் சிறிலங்கா அமைச்சர் சிறீபதி சூரியராச்சி சாடியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று திங்கட்கிழமை சிறீபதி சூரியராச்சி மற்றும் வானூர்தி சேவைகள் முன்னாள் தலைவரும் ஸ்டான்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் குழும உரிமையாளருமான ரிரான் அலெஸ் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். "அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியராச்சியும் நீக்கப்படும் முன்னர் வரை ஒரு சகோதரனைப் போல் ராஜபக்ச இருந்தார். ஆனால் இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் என்பதாலேயே அரசியல் நோக்கத்துடன் என்னை சித்திரவதை செய்கிறார்" என்று ரிரான் அலெஸ் கூறினார். "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எமது நிறுவனம் பணம் கொடுக்கவில்லை. அந்தப் பணத்தை யார் கொடுத்தது என்பது விரைவில் தெரிய வரும்" என்றும் ரிரான் அலெஸ் கூறினார். "கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய சம்பவத்தில் ஹிட்லரைப் போல் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று சிறீபதி சூரியராச்சி கூறினார். "மகிந்த நிர்வாகத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்ற வேண்டும்" என்று அக்கட்சியினருக்கு சிறீபதி சூரியராச்சி வேண்டுகோள் விடுத்தார்.
Monday, June 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.