Monday, June 18, 2007

ஆட்சியை நிர்வகிப்பதைத் தவிர அனைத்தையும் செய்கிறார் மகிந்த: அனுராகுமார திசநாயக்க.!!

[திங்கட்கிழமை, 18 யூன் 2007] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஆட்சியை நிர்வகிப்பதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து வருகிறார் என்று ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுராகுமார திசநாயக்க சாடியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: மகிந்த அரசாங்கத்துக்கு எதுவித திட்டங்களோ, உத்திகளோ உரிய தலைமைத்துவமோ எதுவுமே இல்லை. நாட்டை ஆட்சி செய்து நிர்வகிப்பதைத் தவிர மற்ற அனைத்தையும் மகிந்த செய்து கொண்டிருக்கிறார். இனப்பிரச்சினை, பொருளாதாரம், நிர்வாகம் என ஒவ்வொன்றிலுமே மகிந்தவினால் இந்த நாடு பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. நாட்டினது அனைத்து விவகாரங்களையும் கையாளக் கூடிய ஒரு தலைவர் இந்த நாட்டுக்குத் தேவை. மகிந்த அரசாங்கத்தையோ அல்லது மகிந்த அரசாங்கத்தில் உள்ளோரையோ நாம் நேசிக்கவில்லை. இந்த நாட்டை- இலங்கை மக்களைத்தான் நாங்கள் நேசிக்கிறோம். இந்த நாட்டுக்கு உரிய தலைவராக இல்லாமல் மற்ற எல்லா வேலைகளையும் செய்து வரும் மகிந்த மற்றும் மகிந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஜே.வி.பி.க்கு திருப்தி இல்லை என்றார் அவர். மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.