Friday, June 01, 2007

யாழ்.பொது நூலகம் தீயிட்டு அழிக்கப்பட்டமை ஈழத் தமிழர் வாழ்வியலில் என்றும் ஆறாத பெரும் வடு.!!

[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007]

ஈழத் தமிழ் மக்களின் அரும்பெரும் சொத்தாக விளங்கிய யாழ்.பொது நூலகம் தீயிட்டு அழிக்கப்பட்ட 26 ஆவது ஆண்டு இன்றாகும். அதனையொட்டி இந்த ஆக்கம் வெளியிடப்படுகிறது.

1981ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி நள்ளிரவில், ஜூன் முதலாம்திகதி உலகத் தமிழர்களின் உயரிய சொத்தாகத் திகழ்ந்த யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 26ஆண்டுகள் நிறைவடைகின்றன. எத்தனை யுகங்களானாலும் தமிழ் பேசும் மக்களது நெஞ்சங்களில் உறைந்திருக்கப் போகும் இவ்வடு சிங்களப் பேரினவாத அடக்குமுறைச் சிந்தனையின் செயல் வடிவமே.

தொன்று தொட்டு சிங்களப் பேரின வாதம் தமிழினத்தினைச் சிதைத்து சின்னா பின்னமாக்கி அழிப்பதையே தமது உயர் தார்ப்பரியமாக எண்ணி செயற்பட்டு வருகின்றது.

கல்வி என்பது தமிழ் இனத்தின் அடை யாளம். ஓர் இனம் அழியாமல் நிலைத்து நிற்க, அவ்வினம் விருத்திய டைந்து முன்னேற கல்வியே பெரும் பங்கினை வகித்து நிற்கின்றது.

ஓர் இனத்தின் ஆணிவேராக இருக் கும் கல்வி அழிக்கப்படும் போது அவ் வினம் ஈடாடிப்போகும் என்பது திண் ணம். சிங்களப் பேரினவாதமும் இச் சிந்தனையை சிரசின் மேற்கொண்டு தமிழர்தம் கல்வியினை அழிக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. திடீர் திடீர் கல்விச் சீர் திருத்தங்கள், பாட நூல் திருத்தங்கள் அதற்கும் மேலாக ஆயுத ரீதியிலான ஒடுக்குமுறைகள் மூலம் தமிழர் கல்வியை பாதாளத்தில் தள்ளும் முயற்சியினை சிங்களப் பேரினவாதம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமே யாழ்.நூலகம் எரிக்கப் பட்ட சம்பவம்.

அன்று ஆட்சியில் இருந்த அமைச் சர் காமினி திஸநாயக்க தலைமையி லான சிங்களக் குண்டர்களே யாழ்.நூல கத்துக்கு தீ வைத்தனர். சம்பவத்தை அறிந்த அறிஞர்களும் கல்விமான்களும் துடித்தனர். மாணவர்களும் பெற்றோர் களும் கலங்கி நின்றனர். உலகத் தமிழினமே சிந்தை நொந்து துடித்தது.

அரியபல நூல்கள் கிடைத்தற்கரிய புத்தக பொக்கிஷங்கள் எல்லாம் தீயி னில் பொசுக்கப்பட்டன. அறிஞர்களும் பண்டைய இலக்கியவாதிகளும் தங் கள் கைபட எழுதிய இலக்கிய சுவடிகள் அங்கு பேணி வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாகத் தமிழினத்தின் பூர் வீக இலக்கியங்களும், மரபுகளும் புத் தகங்களாக, சுவடிகளாகப் பேணப்பட்டு வந்த அருங்கலையகமாகவே இருந்தது யாழ்.நூலகம்.

எதிர்காலத்தில் தமிழினம் சிதைந்து விடும் என்ற சிந்தனையின் அடிப்படை யில் தமிழ்க் கல்வித் தாயின் கருவறை சிங்களத்தினால் சிதைக்கப்பட்டது. ஜனனிக்கப்போகும் தமிழ் குழந்தைகள் கூட இந்த துயரத்தினை சுமந்த வர்களாகவே வாழ்வார்கள். மாணவர்களின் அறிவுக் களஞ்சியம் தீயில் பொசுக்கப்பட் டதை இன்றைய மாணவர் சமூகம் எண்ணி எண்ணி மனம் கலங்குகின்றது.

அன்று சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் தொடங்கி தீயிடுதலாக வடிவம் பெற்று இன்று கல்விச் சமூகம் தெருப்பிணங்களாகக் கிடக்கும் துர்ப் பாக்கிய நிலைக்கு தள்ளியிருக்கின்றது சிங்களதேசம். அதனால் ஒடுக்கு முறை சிந்தனையை ஒருபோதும் சிதைக்க முடியவில்லை.

யாழ்.நூலகம் மீண்டும் இப்போது திறக்கப் பட்டிருக்கின்றபோதும் அன் றிருந்த வளத்தினை அதாவது அறி வுப் பொக்கிஷங்களை பெற்றுவிட முடியாது. சிங்களப் பேரினவாதம் வைத்த தீ தமிழ் மக்களின் உள்ளத்தில் ஒரு ஆறாத பெரும் வடுவை அழியாத அடையாளத்தை உருவாக்கி விட்டிருக்கிறது.

தமிழ் மாணவர் ஒன்றியம்
(யாழ்.மாவட்டம்)

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.