Friday, June 01, 2007

தமிழ் மக்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது கொடூரமான வன்முறை: த.தே.கூ.

[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007]

தமிழ் மக்களை கொழும்பில் உள்ள விடுதிகளில் இருந்து வெளியேற்றுவது அடிப்படை உரிமைகள் மீதான கொடூரமான வன்முறை எனவும், இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா தெரிவித்துள்ளதாவது:

இந்த நடைமுறை வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் இருந்து தமது தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வரும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பது தெளிவானது.

இதனால் வடக்கில் இருந்து வந்த தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏ-9 பாதை முகமாலையில் மூடப்பட்டிருப்பதனால் அவர்கள் உடனடியாக தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாது.

வானூர்தி மூலம் அல்லது கப்பலின் மூலம் திரும்புவது என்றாலும் பயணச்சீட்டுக்களை பெறுவதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனவே அரசு தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.