[வெள்ளிக்கிழமை, 1 யூன் 2007]
மணலாற்றில் உள்ள சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிகாரி ஒருவர் உட்பட 5 படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.
மணலாற்றில் உள்ள அதவதுநுவெவப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவல் நிலைகளை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்ட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை அடுத்து அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது.
தப்பியோடிய 350 கிராமவாசிகள் அலிகிம்புலவேல மற்றும் பராக்கிராமபுர பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தஞ்சமடைந்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கிராம மக்களை சந்தித்ததுடன் அவர்களுக்கு உடனடியாக போதிய பாதுகாப்புக்களை வழங்குமாறும் படையினரையும், காவல்துறையினரையும் கேட்டுக் கொண்டார்.
Friday, June 01, 2007
மணலாற்றில் மோட்டார் எறிகணைத் தாக்குதல். சிங்கள குடியேற்றவாசிகள் தப்பியோட்டம்.!!
Friday, June 01, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.