[புதன்கிழமை, 6 யூன் 2007] சிறிலங்கா அரசாங்கத்தின் அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்துக்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் பிமல் ரட்நாயக்க பேசியதாவது: சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலைகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. மேலதிகமான யுத்த தளபாடங்களை சிறிலங்காவுக்கு அது வழங்க உள்ளது. இராணுவ உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்குத்தான் இது வழிவகுக்கும். கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே அமெரிக்கா இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் இது தொடர்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். 2003 ஆம் ஆண்டில் ரணிலும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தமையால் மக்களிடத்தில் எதிர்ப்பு வரும் எனக் கருதினார். இந்தியாவும் இதனை எதிர்க்கிறது. பாக் ஜலசந்திப் பகுதியில் இந்தியாவுடன் சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவல் மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் விநியோக மார்க்கத்தைக் கட்டுப்படுத்த இந்த ஒப்பந்தம் பயன்படுமா? என்றார் அவர். மூலம்: புதினம்
Wednesday, June 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.