Wednesday, June 06, 2007

எம்.கே.நாராயணனுக்கு சிங்கள அமைப்பு கண்டனம்.

[புதன்கிழமை, 6 யூன் 2007] சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு சிங்கள அமைப்பான ஜாதிக சங்க சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் செயலாளர் கலபொட்ட ஞானசார தேரர் கூறியதாவது: சீனா, பாகிஸ்தானிடமிருந்து சிறிலங்கா ஆயுதக் கொள்வனவு செய்யக்கூடாது என்று எம்.கே.நாராயணன் கூறியுள்ள விடயம் பாரதூரமானது. மகிந்த அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வியடைந்து விட்டது. புத்திசாலித்தனமற்ற சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளால் அண்டை நாடுகளுடனான உறவுகள் முறிந்து போய்விட்டன. சிறிலங்கா ஒரு சுதந்திர நாடு. அதனது அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களைத் தீர்மானிக்கும் உரிமை அதற்கு உண்டு. எவரும் அச்சுறுத்த முடியாது. ஆகையால் சிறிலங்காவின் விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது. விவேகமான ஒரு வெளியுறவுக் கொள்கையை நாம் உருவாக்காவிட்டால் ஈழத் தனியரசு உருவாகிவிடும் என்றார் அவர். மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.