[சனிக்கிழமை, 2 யூன் 2007] இலங்கை இந்திய கடற்படைகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டு ரோந்துப் பாதுகாப்பு பணியிகளில் ஈடுபட இந்தியா தனது சம்மதத்தை தெரிவிக்க உறுதியளித்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பின்ணணியில், இலங்கை வெளிநாட்டமைச்சர் போகித்த போகல்லாகம தலைமையிலான இலங்கையின் உயர் பாதுகாப்பு குழு ஒன்று, இன்று இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி தலைமையிலான உயர்குழுவுடன் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே, இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு ரோந்து நடவடிக்கையின் ஏற்பாடுகள் குறித்து விரைவில் இருத்தரப்பும் சந்தித்து முடிவு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பின் போது, சமீபத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய வான் வழித்தாக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இலங்கையின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த இந்தியா மேலும் உதவிகளை வழங்கும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி உறுதி கூறியதாகவும் இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அறிக்கை கூறுகிறது. bbc
Saturday, June 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.