Sunday, June 03, 2007

விடுதலைப்புலிகளின் பீரங்கித்தாக்குதலில் 57 ஆவது படையணியின் ஆயுதங்கிடங்கு வெடித்து சிதறியது.!!

[ஞாயிற்றுக்கிழமை, 3 யூன் 2007] வவுனியா பகுதியில் உள்ள பம்பைமடுவில் அமைந்திருந்த 57 ஆவது படையணியின் தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தளத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 இற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் பீரங்கி நிலைகளை குறிவைத்து விடுதலைப்புலிகள் ஓமந்தை பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடாத்தியதாகவும் அதன் போதே ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. ஒமந்தையின் எல்லைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து படை நிலைகள் மீது விடுதலைப்புலிகள் கடுமையான பீரங்கித் தாக்குதலை நடத்தியதாகவும் அது நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.