[சனிக்கிழமை, 2 யூன் 2007]
சிறிலங்கா அரசு, யாரிடம் ஆயுதங்களை வாங்கவேண்டும் என்பதனைக்கூறும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது என முன்னாள் வான்படைத் தளபதியான ஹரி குணதிலக்க, முன்னாள் இராணுவத் தளபதியான ஹமில்டன் வணசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் அண்மையில் தான்தோன்றித்தனமாக, வெளியிட்ட கருத்துக்கள் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளதுடன் சிங்கள அரசியல் கட்சிகள், படை அதிகாரிகள் மத்தியிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் தளபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஹமில்டன் வணசிங்க தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா எங்கே ஆயுதங்களை வாங்கவேண்டும் என்பதனை இந்தியா கூறக்கூடாது. அது எமது அரசின் தெரிவு. எனவே இந்தியாவின் அறிக்கை நியாயமற்றது.
கடந்த காலங்களில் நாம் நெருக்கடிகளை சந்தித்த போது சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எமக்கு உதவியிருந்தன. எனவே நாம் அவற்றை கைவிட முடியாது.
சிறிலங்காவில் பிரச்சிகளை தோற்றுவித்ததில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு. விடுதலைப் புலிகளை இந்தியாவே உருவாக்கியது. அது தான் உண்மை என்றார் ஹமில்டன் வனசிங்க.
ஜெனரல் ஹமில்டன் வணசிங்க 1988 - 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக கடமையாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
எந்த நாட்டிலும் ஆயுதங்களை கொள்வனவு செய்யும் உரிமை சிறிலங்காவுக்கு உண்டு. எமக்கு பாதுகாப்பு ஆயுதங்களை இந்தியா தர மறுத்தால் அதனை வேறு நாடுகளில் கொள்வனவு செய்யும் உரிமை எமக்கு உண்டு என்றார் முன்னாள் வான்படைத் தளபதியான ஏயர்வைஸ் மார்சல் ஹரி குணதிலக்க.
மூலம்: புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.