[சனிக்கிழமை, 2 யூன் 2007] மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாவடிஓடையை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று சனிக்கிழமை நண்பகல் 11.30 மணியளவில் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி ஒன்றினை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் நடத்திய ஒரு மணிநேர தீவிர பதில் தாக்குதல் காரணமாக சிறிலங்காப்படையினர் தமது முன்னேற்ற முயற்சியினைக் கைவிட்டு பழைய நிலைகளுக்கு திரும்பினர். இந்த முன்னேற்ற முயற்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில் மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதிமீது இன்று காலை சிறிலங்கா வான்படையினர் வான்தாக்குதலை நடத்தியிருந்தனர்.
Saturday, June 02, 2007
மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு.!!
Saturday, June 02, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.