Saturday, June 02, 2007

தனது குப்பைகளை வாங்க இந்தியா சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது: கொழும்பு ஊடகங்கள்.!!

[சனிக்கிழமை, 2 யூன் 2007] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் அண்மையில் தான்தோன்றித்தனமாக வெளியிட்ட கருத்துக்கள் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் சிங்கள அரசியல் கட்சிகள், படை அதிகாரிகள், ஊடகங்கள் மத்தியிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குப்பைகளை வாங்க இந்தியா அரசு, சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. எம்.கே.நாராயணனின் கருத்து தொடர்பாக கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்த டெய்லி மிரர் நாளேடு 'இந்தியாவால் தனது குப்பைகளை வாங்க சிறிலங்காவை நிர்ப்பந்திக்க முடியும்' என்ற வாசகத்தின் கீழ் ஒரு குப்பை நிரம்பிய கூடையின் முன் நாராயணன் நிற்பது போன்ற படத்தை வரைந்துள்ளது. இந்தியாவால் முன்னர் வழங்கப்பட்ட இரு பரிமாண ராடார்கள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கண்டறியத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு முன்னர் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. தி ஐலன்ட் நாளேடு தெரிவித்துள்ளதாவது: நாம் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். எனவே சீனா, பாகிஸ்தானிடம் சிறிலங்கா ஆயுதங்களை வாங்கக்கூடாது என்ற எம்.கே.நாராயணனின் கருத்து ஹிட்லரின் நாசி அரசின் தோற்றப்பாட்டை கொடுத்துள்ளது. இந்தியா தாக்குதல் ஆயுதங்களை வழங்காதாம், பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குமாம் என்ற கருத்து கற்களையும், துடைப்பம் கட்டைகளையும் கொண்டா விடுதலைப் புலிகளுடன் மோதுவது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவின் கருத்தை சிறிலங்கா பின்பற்றாது விட்டால் இந்தியா சில குழப்பமான வேலைகளில் ஈடுபடலாம். அதாவது விடுதலைப் புலிகளின் மீதான தனது கட்டுப்பாடுகளை மென்மையாக்கலாம் என அது தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முன்னாள் இணை வெளிவிவகார செயலாளரும், வெளிவிவகார ஆய்வாளருமான கே.கொடகே தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் பாதுகாப்பு தேவைகளை இந்தியா நாயைக் கையாளும் எசமான் போல கையாள்கின்றது. சிறிலங்கா பொதுச் சேவைகள் பொருட்கள் வழங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்துள்ளது. அது சீனாவுடன் படைத்துறை ஒத்திகைகளையும் முன்னர் மேற்கொண்டிருந்தது என்றார். இது தொடர்பில் டெய்லிமிரர் நாளேடு தெரிவித்துள்ளதாவது: பிராந்திய காவல்துறை வீரர் போன்று செயற்பட இந்தியா முயல்கின்றது. ஒரு சுதந்திர நாடு ஒன்றின் மீதான மன்மோகன் சிங்கின் அணுகுமுறை ஜனநாயகமற்றது. எம்.கே.நாராயணனின் வாதத்தின் அடிப்படையில் இந்தியா செயற்பட நாம் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. நன்றி:புதினம்

1 comment:

  1. உங்களை கடவுள் வந்தாலும் திருத்த முடியாது. எம்.கே. நாரயணன் அவர்களின் கருத்துக்கு சிங்களவர் சீற்றம‌டையலாம். ஆனால் தமிழர்கள் சீற்றமடைய காரணம் என்ன? இலங்கை இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறி வேறு நாடுகளில் நாசகார ஆயுதங்களைக் கொள்வனவு செய்தால் ஈழத்தமிழருக்குதானே இழப்பு.
    இலங்கை அரசு மிக ஆபத்தான ஆயுதங்களை வாங்கினால் நாம் என்ன செய்ய முடியும்? மிக் 29 விமானங்களை ரஷியாவிடம் அல்லது உக்கிரேனிடம் இருந்து கொள்வனவு செய்வதைத் தடுப்பது தான் நாரயணன் அவர்களின் உள்னோக்கம். இந்தியா என்ன சொல்கிறது? தற்காப்பு ஆயுதம் மட்டும்தான் தருவோம் என்பது கூட ஒரு வகையில் ஆறுதல் தரும் செய்தி. இந்தியாவின் நட்புறவு எங்களுக்கு மிக மிக அவசியம். இந்தியாவின் நட்புறவு சமிக்ஜைகளை சரியாக புரிந்துகொள்ளவேண்டிய நேரம் இது.
    சிங்கள அரசுடன் வெளிப்படையாக இந்தியா முரண்படுகிறது. நாம் ஏன் சீற்றமடைய வேண்டும்?

    குள‌க்கோட்ட‌ன்

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.