Wednesday, June 06, 2007

இராணுவம் ஏற்க மறுத்த சடலங்கள் எரியூட்டப்பட்டன.

[புதன்கிழமை, 6 யூன் 2007] சிறிலங்கா இராணுவம் ஏற்க மறுத்த இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் இன்று உரிய மரியாதைகளுடன் எரியூட்டப்பட்டுள்ளன. மன்னாரில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 12 சடலங்கள், கிளிநொச்சியில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவிடம் கையளிக்கப்பட்டன. இவற்றில் இரண்டை மட்டும் இராணுவத்தினர் ஏற்றனர். ஏனையவற்றை ஏற்க மறுத்துள்ளனர். இதனையடுத்து 10 சடலங்களை விடுதலைப் புலிகளிடம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவினர் இன்று கையளித்தனர். இச்சடலங்கள் இன்று புதன்கிழமை மாலை உரிய இராணுவ மரியாதைகளுடன் எரியூட்டப்பட்டன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.