Wednesday, June 06, 2007

வவுனியா கிளைமோர் தாக்குதல்: இரு இராணுவத்தினர் பலி.!

[புதன்கிழமை, 6 யூன் 2007] வவுனியாவில் நடத்தப்பட்ட இரு வேறு கிளைமோர் தாக்குதல்களில் இரு சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமடைந்தனர். வவுனியா மறவன்குளம் வீதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நபர் முதலில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே பூவரசங்குளம் சந்திக்கு அருகாமையில் மன்னார்- வவுனியா வீதியில் உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்ற சிறிலங்கா இராணுவத்தினரை இலக்கு வைத்து இன்று மற்றொரு கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நபர், அனுராதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.