[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007] ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவைகள் குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்த விமர்சனங்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு வருகை தந்த பிரித்தானியா இணை அமைச்சர் பயங்கரவாதத்தை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று கோத்தபாய தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதுவர், பிரித்தானிய இணை அமைச்சர் பயங்கரவாதத்தைக் கண்டனம் செய்துதான் கருத்து தெரிவித்தார். மேலும் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் என்றார். ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பில் இரட்டை வேடமிடுவதாக கோத்தபாய ராஜபக்சவின் விமர்சித்திருந்தார். இக்கருத்து ஆச்சரியமளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு என சொந்தக் கொள்கை இருக்கிறது- இது தொடர்பில் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் விவாதிக்க உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம்சாட்டியிருந்தார். "இத்தகைய குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இத்தகைய விமர்சனங்களால் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஆபத்து ஏற்படும்" என்று ஐக்கிய நாடுகள் சபையும் பதிலளித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூலம்: புதினம்
Tuesday, June 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.