Tuesday, June 12, 2007

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனுக்கு துணை இராணுவக் குழு அச்சுறுத்தல்.!!

[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திராகாந்தன் துப்பாக்கி முனையில் எச்சரிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் பிரதேசத்துக்கு சந்திரகாந்தன் தனது ஆதரவாளர்களுடன் சென்ற போது கருணா குழுவின் இனியபாரதி உள்ளிட்டோரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இனியபாரதி தரப்புக்கும் சந்திராகந்தன் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திருக்கோவிலை விட்டு உடனே வெளியேறுமாறு சந்திரகாந்தனை இனியபாரதி துப்பாக்கி முனையில் எச்சரித்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புடன் சந்திரகாந்தன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.