Tuesday, June 12, 2007

ஐ.நா.வுக்குள்ளும் புலிகள் ஊடுருவல்- தனிமைப்படுத்துவதாக பிரித்தானியா மிரட்டல்: கோத்தபாய ராஜபக்ச புலம்பல்.!!

[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007]


கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றியது நியாயம்தான் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்களுக்குள் 30 ஆண்டுகாலமாக திட்டமிட்டு புலிகள் ஊடுருவிவிட்டனர் என்றும் பிரித்தானியா புலிகளுக்கு எதிராக பேசாமல் சிறிலங்காவை தனிமைப்படுத்தப்போவதாக மிரட்டுகிறது என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்:

மனித உரிமை விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் இரட்டை நிலைப்பாடுகளை செலுத்துகின்றன.

கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட இவ்விவகாரத்தில் அனைத்துலகம் பாகுபாட்டுடன் சிறிலங்காவை வம்புக்கு இழுக்கின்றன. எமது பிரச்சனையை புரிந்து கொள்ளாமல் எங்களை பிரச்சினையில் தள்ளப் பார்க்கின்றனர்.

நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடமாட்டோம்.

எமக்கு சார்க் நாடுகளும் ஆசிய நாடுகளும் உள்ளன.

பிரித்தானியா அல்லது மேற்கத்தைய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நாங்கள் அவர்களைச் சார்ந்து இல்லை.

கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் அனைத்துலகத்தின் நிலைப்பாடு ஒன்றே இந்த ஒட்டுமொத்த உலகமும் தவறாக ஏமாற்றப்பட்டதற்கு உதாரணமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

நாங்கள் 350 பேரை கைது செய்யவில்லை- தடுத்து வைக்கவில்லை.

எது சிறந்த வாய்ப்போ அதனையே செய்துள்ளோம்.

கொழும்பில் ஏதும் சட்ட ரீதியான வர்த்தகம் இல்லை எனில்.... நாங்கள் உங்களை தடுத்து வைக்க விரும்பவில்லை. உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றுதான் கூறுகிறோம். உண்மையில் இந்த நடவடிக்கைதான் மிகச் சிறந்தது. அவர்கள் அனைவரையும் நாங்கள் தடுத்து வைத்திருக்கவும் முடியும்.

நாங்கள் எங்களைப் பாதுகாக்கிறோம். எங்களை ஆபத்துக்குள்ளாக்காதீர்கள். நான் பயங்கரவாதிகளைப் பற்றி பேசுகிறேன். அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் "கொவெர்ட் ஓப்பரேசன்ஸ்" என்பார்கள்- சிறிலங்காவில் அது நடந்தால் கடத்தல் சம்பவம் என்பார்கள். இது ஒரு வார்த்தை விளையாட்டு.

சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய அமைச்சர் ஹிம் ஹாவெல், முற்றிலுமாக தவறான தகவல்களைக் கொண்டுள்ளார்.

அவர் ஒரு வார்த்தை கூட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசவில்லை

அவர் ஒரு வார்த்தை கூட பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசவில்லை.

எம்மை தனிமைப்படுத்தப்போவதாகவும் நிதி உதவியை நிறுத்தப் போவதாகவும் மிரட்டுகிறார்.

நாங்கள் பாதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

அமெரிக்கா தாக்கப்படும்போது ஒவ்வொரு நாடும் பயங்கரவாதம் என்கிறது. ஆனால் இலங்கையில் மட்டும் பயங்கரவாதிகளை ஏன் வேறாக நடத்துகிறீர்கள்? அமெரிக்காவை தனிமைப்படுத்துவது குறித்து பிரித்தானியா பேசுமா?

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் நிறுவனங்களும் மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றன. உள்ளுர் பணியாளர்களால் அவர்களுக்கும் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு ஐ.நா. நிறுவனங்களுக்குள் ஊடுருவியுள்ளனர். பிரச்சினை என்பது ஐ.நா. அமைப்புகளில் உள்ள உள்ளுர் பணியாளர்களால்தான் என்றார் கோத்தபாய ராஜபக்ச.

மூலம்: புதினம்

3 comments:

  1. நல்ல விஷயங்கள் நடக்குது! எல்லாம் எங்களுக்கு நல்லது தான். சிங்கன் கடைசியில் அமெரிக்கக் குடியுரிமையையும் இழக்கப் போறார். இது குடும்பமே படிப்பறிவில்லாத முட்டாள்கள் தான் போல!

    ReplyDelete
  2. பயங்கரவாதத்துக்கும் விடுதலைபோராட்டதின் நியாயத்தன்மையை உலகம் புரிய ஆரம்பித்திருகின்றது.இதற்கு முக்கிய காரணம் புலம் பெயர் மக்களின் அண்மைக்கால எழுச்சிகள்.இனி சமஸ்டி இல்லை தமிழீழமே முடிவு .புலிகளின் பொறுமைக்கும் ராஜதந்திரத்துக்கும் வெற்றிகள் கிடைக்க தொடங்கிவிட்டது

    ReplyDelete
  3. கோத்தபாய ராஜபக்ச-வுக்கு இனவெறி என்கிற கிறுக்கு தலைக்கு ஏறிடுச்சி போல.

    அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்த பின்னரும் எந்த ஒரு முகலாயரையும் நீ கோபுரம் தகர்த்தவனின் இனம் என கூறி நாடு கடத்தவில்லை. ஆனால் சிங்கள அரசு எங்கள் பாதுகாப்புக்கென கூறி தமிழ் மக்களை நாடு கடத்தியது.

    இப்படியே போனால் அமெரிக்காவே சிங்களத்தை ஆளும் சகோதரர்களை நாடு கடத்தும்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.