Tuesday, June 12, 2007

மனித உரிமைகளை மீறியிருந்தால் படையினருக்கு விசா மறுக்கப்படும் - ஐரோப்பிய நாடொன்றின் தூதரகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007]

ஐரோப்பிய ராஜதந்திரிகள் தெரிவிப்புபாதுகாப்புப் படையினர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருக்குமானால் அவர்களுக்கான விசா அனுமதி மறுக்கப்படும் என்று மேற்குலக ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு விஸா அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து ஐரோப்பிய நாடொன்றின் தூதரகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.விசாவுக்காக ஒருவர் விண்ணப்பிக்கையில் இது தொடர்பாக பரிசீலிக்கப்படுவதும் கவனத்தில் கொள்ளப்படுவதும் உண்டு. எனினும் தற்போது இது தொடர்பாக மேலும் விரிவாக ஆராயப்படும் என்றும் ஐரோப்பிய நாடொன்றின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சகல விசா விண்ணப்பங்களுக்கும் நேர்முகம் காணப்படுதல் வழமையான விவகாரமாகும். எனினும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார் விடயத்தில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமானால் அவரது விசா நிராகரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா அனுமதிகோரி விண்ணப்பித்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் விசா விண்ணப்பம் அண்மையில் நிராகரிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டார் என்ற காரணத்தினாலேயே இவரது விசõ நிராகரிக்கப்பட்டதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸாரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கபடுமென ஐரோப்பிய இராஜ தந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கை அதிகாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத் தடையை கொண்டு வருமாறு மனித உரிமை அøமைப்புக்கள் பலவும் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த 15 மாத காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயோ அன்றேல் கொல்லப்பட்டேõ இருக்கலாமென மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த வாரம் கொழும்பு லொட்ஜூகளிலிருந்து தமிழர்கள் பலாத்காரமாக வட கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமையை தொடர்ந்தே இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் கூடிய கவனம் செலுத்த தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் இச்சம்பவத்திற்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் இது அரச அதிகாரிகள் விட்ட தவறு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.