Tuesday, June 12, 2007

ஜெனீவாவைத் தொடர்ந்து கனடாவிலும் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணி.

[செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007]

கனடா ரொரன்ரோவில் கனடியத் தமிழ் மக்களது உணர்வுகளின் வெளிப்பாடாக "வெல்க தமிழ் - 2007" நிகழ்வானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்காபரோவின் அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 அளவில் ஆலய மணியோசையுடன் நிகழ்வு தொடங்கியது.

திருமதி செல்வநாயகம் கனகாம்பிகை (மாவீரர் மேஜர் நித்திலாவின் தாயார்) ஈகைச்சுடர் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து கனடியத் தேசியப் பண், தமிழீழத் தேசியப் பண் ஆகியவை இசைக்கப்பட்டன.

ஏறுது பார் கொடி ஏறுது பார் பாடலுடன் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

கனடியத் தமிழ் வானொலியின் ஒலிபரப்பாளர் பொன்னையா விவேகானந்தன் இந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

"தாய் மண்ணே உனக்கு எங்கள் வணக்கம்" எனும் பாடலுக்கு வரவேற்பு நடனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து

"வெல்க தமிழ்"

"எங்கள் தலைவர் பிரபாகரன்"

"எங்கள் நாடு தமிழீழம்"

உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ரொரன்ரோ மத்திய கலை பண்காட்டுக் கழகம் வழங்கிய "செங்கோல்" எனும் நாடகம் நடைபெற்றது. இந்நாடகமானது இலங்கையில் இருந்து தனித் தமிழீழம் அமைவதனைச் சித்தரிப்பதாக அமைந்தது.

ரொரன்ரோ பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மாணவிகளான சுஜானி, சுதாமதி ஆகியோரும் மிகவும் எழுச்சிபூர்வமாக உரையாற்றினர்.

இதன் இடையிடையே கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதாவது லிபரல் கட்சி, கொன்சவேற்றிக் கட்சி (தற்பொழுது ஆளும் கட்சி) மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்தோர் உரைகளை நிகழ்த்தினர்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்து தொடர்பாக தமது கண்டனங்களைத் தெரிவித்துடன் மகிந்த அரசாங்கத்தின் பேரினவாதச் செய்களைக் கண்டித்தும் அவர்கள் உரையாற்றினர். ஒட்டோவாவிலிருந்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொலைபேசி ஊடாக உரை நிகழ்த்தினர்.

இளையோரினால் வான் புலிகளின் பாடலுக்கான நடனம் நடத்தப்பட்டது. அப்போது அங்கே குழுமியிருந்த பல மக்களும் ஒன்று சேர்ந்து பாடி ஆடினர்.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

தமிழீழத் தேசியக் கொடி

தமிழீழத் தேசியத் தலைவரின் உருவம்

ஆகியவற்றை பதாகைகளாகத் தாங்கியவாறு உணர்ச்சிப் பெருக்கோடு முழக்கமிட்டனர்.

ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு அம்சக் கோரிக்கைகள் கனடாவிலும் தெளிவாக முன்வைக்கப்பட்டன.

கனடிய கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய, மிகச் சுருக்கமான நாடகக் கலை நிகழ்வு, பார்வையாளர்களை தற்போதைய தமிழினத்தின் களநிலையை மனக்கண்முன் கொண்டுவந்தது.

அன்று பண்டா தொடக்கம் இன்றைய ராஜபக்ச வரை பௌத்த சிங்கள இனவெறி பிடித்து அலையும் சிங்கள ஆட்சியாளர்களின் மனநிலையை, மிக லாவகமாக வெளிக்கொணரும் கலைக் காவியமாக நாடக நிகழ்வு அமைந்தது.

இந்நிகழ்வில் கனடிய ஊடகவியலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் செய்தி சேகரிக்க வருகை தந்திருந்தனர்.










0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.