
[வியாழக்கிழமை, 21 யூன் 2007]
தொப்பிகல பிரதேசத்தை அரசாங்கம் இன்னும் சில தினங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். தற்போதைக்கு தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றிவிட்டன என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது :
தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் நாங்கள் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். தொப்பிகல பகுதியில் உள்ள ஏழுக்கும் மேற்பட்ட புலிகளின் முகாம்களை நாங்கள் அழித்துவிட்டோம்.
தொப்பிகல பகுதியில் அதிகமானளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றோம். அப்பகுதியிலிருந்து அதிகமான புலிகள் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் அதிகமான புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர்.
வன்னிப்பிரதேசத்திலும் நேற்று இரண்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் புலி உறுப்பினர்கள் 11 பேர் பலியாகியுள்ளனர். தற்போது புலிகள் வழிபாட்டு தலங்களை யுத்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திவருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை பருத்தித்துறை பகுதிக்கு புலிகள் 24 படகுகளில் வந்தனர். இதனை அவதானித்த கடற்படையினர் படகுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது புலிகளின் 9 படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 க்கும் மேற்பட்ட புலிகள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு இராணுவமும் விமானப்படையும் தமது ஒத்துழைப்பை வழங்கின.
Thursday, June 21, 2007
சில தினங்களில் தொப்பிகல பகுதியை கைப்பற்றுவோம் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க.!!!
Thursday, June 21, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.