[வீரகேசரி நாளேடு]
வயதுகுறைந்த 135சிறுவர்களை தமது அமைப்பிலிருந்து விடுவிப்பதாக விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிவிப்பை ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிறுவனமான யுனிசெவ் வரவேற்றுள்ளது. இது வரவேற்கக்கூடிய செயலென கூறியுள்ள யுனிசெவ் இன் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் விடுதலைப்புலிகள் தம்வசமுள்ள அனைத்து வயது குறைந்த சிறுவர்களையும் விடுதலை செய்யவேண்டுமென கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கோர்டன் வெய்ஸ் மேலும் கூறியதாவது ; விடுதலைப்புலிகள் சர்வதேச நியமங்களில் இருந்து விலகி நிற்கமுடியாது . அவர்களுடன் நடத்தப்பட்ட தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை அடுத்து சர்வதேச நியமங்களின்படி, 18வயதுக்கு குறைவான சிறுவர்களை தமது அமைப்பில் சேர்த்துக்கொள்வதில்லை என உறுதியளித்தனர். அத்தோடு தமது அமைப்பிலுள்ள 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை விடுவிப்பதற்கும் புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த 135 சிறுவர்களும் விடுவிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே எம்மிடம் உள்ள கணிப்பீடுகளில் மாற்றம் செய்யப்படும். ஏனெனில் முன்னரும் இதே போன்ற அறிவிப்புகள் விடுக்கப்பட்ட போதிலும் அவை முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றார்.
Thursday, June 21, 2007
சிறுவர்களை விடுவிக்கும் புலிகளின் அறிவிப்புக்கு யுனிசெவ் வரவேற்பு.!!
Thursday, June 21, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.