Monday, June 18, 2007

வடக்கு பின்தளங்களில் இரவு - பகலாக தொடர் எறிகணைத் தாக்குதல்கள்.!!

[திங்கட்கிழமை, 18 யூன் 2007] மன்னார் - வவுனியா - முகமாலை பின்தளங்களில் இருந்து ஒரு வாராமாக இரவு - பகலாக செறிவான தொடர் எறிகணைத்தாக்குதல்களை சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். நாள்தோறும் குறுகிய நேர இடைவெளியில் ஆட்டிலெறித்தாக்குதல் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். 130 மில்லிமீற்றர் ஆட்டிலெறித்தாக்குதல் மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை தொலை தூரத்துக்கு அதிகளவில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்துகின்றனர். இத்தகைய செறிவான எறிகணைத் தாக்குதல்களால் வன்னிப்பகுதி தொடர்ந்து அதிர்ந்த வண்ணமுள்ளது. இத்தாக்குதலால் மக்களின் வதிவிடங்கள், வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஓரு போர் நடப்பது போன்ற தோற்றத்தில் இந்த எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.