Tuesday, June 05, 2007

சிறீலங்காவில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - பிரித்தானியா ஆழ்ந்த கவலை.

[செவ்வாய்கிழமை, 5 யூன் 2007]

சிறீலங்காவில் பாதுகாப்பு நிலமை மிகவும் மோசமடைந்து, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக, பிரித்தானியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் நேற்று கொழும்பில் ஊடகர்களைச் சந்தித்து பேசும்போது இந்தக் கவலையை வெளியிட்டார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரும், வன்முறைகளும் அமைதியை சீர்குலைத்து வருவதாகக் கூறிய சில்கொட், அமைதிப் பேச்சு மூலமான தீர்வுக்கான வாய்ப்புக்கள் குறைவடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இரத்மலானையில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் 7 பொதுமக்கள் பலியானமை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களையும் சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் சுட்டிக்காட்டினார்.

மூலம்: பதிவு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.