[செவ்வாய்கிழமை, 5 யூன் 2007]
கருணா ஒட்டுக் குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களைக் கடத்திக் கொலை செய்திருப்பதாக, விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிக் கருத்துக்கூறிய சப்ரகமுவ மாகாண காவல்துறை பொறுப்பதிகாரி சரத் பெரேரா, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கருணா குழுவுக்குச் சொந்தமானது எனக் கூறியிருக்கின்றார்.
இதேவேளை, செஞ்சிலுவைச்சங்க பணியாளர்கள் இருவரும் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டபோது அவர்களுடன் உடனிருந்த ஏனைய நான்கு பணியாளர்களிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மவுன்ற் லவினியா விடுதியில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு மட்டக்களப்பு திரும்பிச்செல்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் காத்திருந்தபோது பணியாளர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
மூலம்: பதிவு
Tuesday, June 05, 2007
கருணா குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களை கொன்றனர் - காவல்துறை.!
Tuesday, June 05, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.