[செவ்வாய்கிழமை, 5 யூன் 2007]
ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தமது ஊழியர்கள் இருவர் சிறீலங்காவில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்கள்.
யூன்மாதம் 1ம் திகதி வீடுதிரும்புவதற்காக புகையிரத நிலையத்தில் தரித்து நின்றவேளையில் இவர்கள் கடத்தப்பட்டு 2ம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கொரூர கொலை தம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு தமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவிப்பதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறீலங்கா ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் இச்சம்பவமானது திட்டமிட்டு ஐனாதிபதி அவர்கட்கும் அவரது அரசாங்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, June 05, 2007
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கண்டனம்.
Tuesday, June 05, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.