[புதன்கிழமை, 20 யூன் 2007] ஆட்கடத்தல் மிரட்டல் பணம்பறித்தல் போன்ற குரூரத்தனமான ஈனச்செயல்களில் சிறிலங்காப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனப் பல பொது அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன. இவை தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுடன் நின்றுவிடவில்லை சிறிலங்காவில் தமிழர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இது நடக்கிறது. இந்த ஆள் கடத்தல் நடக்கும்போதெல்லாம் படைத்தரப்பும் அரசாங்கமும் மறுத்து வந்திருக்கின்றன. இப்;போது படைத்தரப்பு ஒப்புக்கொண்டமை இராணுவத்தின் தலைகுனிவாகும். தமிழ் மக்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் இவ்ஆட்கடத்தல் இப்போது பல்கிப் பெருகி சிறிலங்கா இராணுவத்தால் மூடி மறைக்க முடியாத முக்கிய விடயமாகிவிட்டதன் வெளிப்பாடே இராணுவத்தளபதி சந்திரகிரியின் கூற்று. யாழ்குடாநாட்டில் இடம் பெற்றுவரும் ஆட்கடத்தலில் சிறிலங்காப்படையினர் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனத் சூசகமாகத் தெரிவித்துள்ளமை படைத்தரப்பின் மீதுள்ள பாரியகுற்றச்சாட்டு கோடிட்டுக்காட்டப்படுவதாகக் கொள்ளலாம். இவ்வாறான ஆட்கடத்தல் மோசடிகளில் ஈடுபடும் படையினர் மீது நடவடிக்கை ஏடத்ததாக இல்லை. இராணுவத்திற்கு ஆதரவாக இயங்கும் துனை தமிழ் ஆயுதக்குழுக்கள் மீது பழிபோட்டுத்தப்பிக் கொண்டதைக்காணலாம். ஆனால் பன்னாட்டுச் சமூகத்திடம் இருந்து சிறிலங்கா அரசிற்கும் படைத்தரப்பிற்கும் வரும் அழுத்தங்களில் இருந்து விடுபடவே இவ்வாறான தர்க்கரீதியான சில உண்மைகளைக் காட்டுகின்றனர். நியு யோர்க் ரைம்ஸ் செய்தியாளர் போமின் சென்குப்தாவிற்கு யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜென்றல் ஜி. ஈ சந்திரகிரி அளித்த நேர்கானலில் யாழ்குடாநாடடில் நடைபெறும் ஆட்கடத்தலில் சிறிலங்கா இராணுவத்திற்கு தொடர்பு இருக்கலாம் என ஒப்புக்கொண்டுள்ளார் . சிறிலங்கா அரசின் மனித உரிமைமீறல்கள் அதிகரித்து வருவது குறித்து பன்னாட்டு தலைவர்கள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில் சந்திரகிரியின் கூற்று வந்துள்ளது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தவறுகளை ஓரம் கட்டிவிட்டு நல்ல பிள்ளையாக நடிக்க மேற்குலக நாடுகளின் நட்பை பெற இது போன்ற செய்திகளைத் தம் சகலர்களைக் கொண்டும் படைத்தளபதிகளைக்கொண்டும் வெளிக்கொணர முயற்சித்தாரா போன்ற ஊகங்களும் வெளிவருகின்றன. சந்திரகிரியின்; செவ்விக்கு உலக ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது முக்கியமானவை இதற்குப்பின்னர் இனைத்தலைமை நாடுகளின் கூட்டம் எதிர்வரும் 25 26 ம் நடைபெறப்போகிறது இதன் எதிரொலியாக இது போன்று மேலும் பல செய்திகள் வரலாம்….?
Wednesday, June 20, 2007
ஆட்கடத்தளுடன் சிறிலங்கா படையினருக்குத் தொடர்பு ஓப்புக்கொண்ட சந்திசிறி.!
Wednesday, June 20, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.