கொழும்பின் பிரதான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கேபிள் நீண்டகாலத்துக்கு முன்பு புதையுண்ட பொருட்களையோ அல்லது கட்டடத்தையோ தேடி இனம்தெரியாத நபர்கள் தோண்டியதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை திருத்துவதற்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரியவருகிறது. இதனால் சாதாரணமாக மின்வழங்கும் கொலன்னாவ பிரதான மின்வழங்கும் பாதையூடாக மின்சாரம் வழங்க முடியாது மாற்று வழியான பன்னிப்பிட்டிய வழியாக மின்வழங்கப்படுவதாகவும் மேலும் அறியமுடிகிறது. சிலோன் மின்சார சபையின் பிரதான பொறியியலாளர் மேலும் தெரிவிக்கையில் இதனை திருத்துவதற்கு இருமாதங்கள் ஏற்படும் எனவும் திருத்த வேலைகள் இடம்பெறும்போது தேசியவைத்திசாலை, மருதானை, கொழும்பு 4, 5, மற்றும் கொழும்பு 7 ஆகியபகுதிகளுக்கு மின்சாரம் வழங்கமுடியாதுபோகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனை திருத்துவதற்கு அவுஸ்ரேலியாவை சேர்ந்த இதனை முதலில் நிறுவிய பொறியியலாளர்கள் வரவுள்ளதாகவும் இச்சேதம் யூன் மாதம் 11 ற்கும் 16 ம் திகதிக்கும் இடையே நிகழ்ந்துள்ளதாகவும் தமக்கு கடந்த சனிக்கிழமையே தெரிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Thursday, June 21, 2007
கொழும்பில் பிரதான மின்வழங்கும் கேபிள் பாதிப்பு : கொழும்பு நெருக்கடியில்.!!
Thursday, June 21, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.