ஐக்கிய நாடுகள் சபையினால் உலக அகதிகள் நாள் இன்று புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கானப் பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழர் தாயகத்திலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரை 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெரும் தொகையான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலிருந்து 2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அண்மையில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் சூரிய வெளிச்சத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான உணவு மற்றும் சுகாதார அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீருக்காக பல மைல் தூரம் செல்கின்றனர். குழந்தைகளின் கல்வி நாசமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய அகதி முகாம்களில் சுகாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது 3,50,000 பேர் தமிழர் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட சிங்கள பொதுமக்களுக்கு அனைத்துலக உதவியுடன் நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பெருந்தொகையான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ இன்னமும் தாற்காலிக முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கான ஆழிப்பேரலை நிதி உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவிட்டது. மழையாலும் வெள்ளத்தாலும் அந்த மக்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர்.
1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கொழும்பிலிருந்தும் தமிழர் தாயகத்திலிருந்தும் பெருந்தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
1980 ஆம் ஆண்டுகளிலிருந்து பலாலி வானூர்தி நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். அதேபோல் அதே காலகட்டத்தில் ஊர்க்காவற்றுறை பிரதேச மக்களும் இடம்பெயர்ந்தனர். தமிழ் மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பலாலி மற்றும் ஊர்க்காவற்றுறை பிரதேசங்களில் வலுவான இராணுவத் தளங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. வடக்கில் கொக்கிளாய் தொடக்கம் அம்பாறை வரையில் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
இப்பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பிற மாவட்டங்களிலிருந்து சிங்கள மக்கள் அங்கு குடியேற்றப்பட்டு வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைகளால் மூதூர் கிழக்கு மற்றும் திருகோணமலையிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறினர். அப்பகுதியிலிருந்து பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போது அந்தப் பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்துக்கு இருந்தது போல் 3 இலட்சம் மக்கள் மீண்டும் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதல்களாலும் பெருந்தொகையான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த போது 4 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளிலும் வன்னிப் பிரதேசங்களிலும் வசித்தோரில் அரைவாசிப் பேர் திரும்பிவிட்டனர்.
இலங்கையிலிருந்து 5 இலட்சம் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ளவும் கல்வி கற்கவும் வெளிநாடுகளுக்குத் தப்பியுள்ளனர். தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 2 மில்லியன். 75 வீதத்தினர் இடம்பெயர்ந்துள்ளனர்.
தங்கள் தாயகத்திலிருந்து பலவந்தமாக தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவது என்பது அனைத்துலக மனித உரிமை விதிகளுக்கு எதிரானது. அது ஒரு மனித உரிமை மீறல். அனைத்துலக அளவில் தமிழ் மக்கள்தான் மிகவும் அதிக எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் இக்கொடூர நடவடிக்கைகள் குறித்து அனைத்துலக சமூகம் விழித்துக்கொள்ள வேண்டும் என்று செல்வி தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.