[செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007]
யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரச சார்பு ஊடகமான 'டெய்லி நியூஸ்' நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்:
அரச படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதால் போர் நிறுத்த உடன்பாடானது செயற்திறனற்றதாக உள்ளது.
தற்போது போர் நிறுத்த உடன்பாடு என்பது இங்கு இல்லை. போர் நிறுத்தம் தொடர வேண்டும் எனில் விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்தாதவாறும், தமது எதிர்த்தரப்பினரை கொல்லாதவாறும் அரச தலைவரால் நிபந்தனைகள் முன்வைக்கப்பட வேண்டும்.
யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் தம்மால் இயன்றவற்றை செய்ய முயற்சிப்பார்கள். அது அவர்களுக்கு பெரும் வெற்றிகரமானது. ஆனால், அவர்கள் மறுபடி முயற்சித்தால் நாம் நன்கு தயாராகவே இருக்கின்றோம். எனவே முன்னரை விட நாம் திறமையாக செயற்படுவோம். எனவே அவர்கள் எம்மை தாக்கினால் அது அவர்களுக்குப் பேரழிவாகவே முடியும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை கருணா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் எமக்கு உதவவில்லை. எமது படையினரே கிழக்கை மீட்டனர். கருணாவின் ஆட்கள் அல்ல. இம் மோதல்களில் நாம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரையும் அதிகாரிகளையும் இழந்துள்ளோம்.
கருணா குழுவிற்குள் மோதல்கள் நடைபெறுவதாக நாமும் அறிந்தோம். அந்த குழுவில் உள்ள ஒரிரு உறுப்பினர்கள் ஏனைய உறுப்பினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் ஆயுத வலுவின் 50 வீதத்தை அழித்து விட்டோம். குறிப்பாக அவர்களின் பீரங்கிகளை அதிகம் அழித்து விடடோம். படை வலுவிலும் கணிசமானோரை அவர்கள் இழந்துள்ளனர். தற்போது அவர்களால் கிழக்கில் படைச்சேர்ப்பை மேற்கொள்ள முடியாது. அவர்களால் கிளிநொச்சியில் மட்டுமே உறுப்பினர்களை சேர்க்க முடியும். யாழ். குடாநாட்டில் இருந்தும் அவர்களால் படைச் சேர்ப்பை செய்ய முடியாது. விடுதலைப் புலிகள் தற்போது மிகவும் பலவீனமாக இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் வான்படை வடபோர் முனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அவர்களால் ஒரு சில குண்டுகளையே வீச முடியும். அதனால் ஏற்படும் சேதங்கள் குறைவானவை. எவர் ஒருவர் தனியார் வானூர்தியைக்கொண்டிருந்தாலும் இதனை செய்யலாம். அதாவது ஆபத்தை பொருட்படுத்தாது வந்து இரு குண்டுகளை வீசலாம். எனினும் நாம் அவர்களின் வான்படையை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
போர் இழுபடுவதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணமல்ல. இராணுவமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இராணுவம் முன்னர் பல தவறுகளை விட்டிருந்தது. நாம் பல பின்னடைவுகளை சந்தித்தோம். பேரழிவுகளையும் எதிர்கொண்டோம். ஏனெனில் நாம் பலவீனமான வீரர்களையும், கட்டளைத் தளபதிகளையும் பல பகுதிகளில் கொண்டிருந்தோம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசியல் தலையீடுகளும் இருந்தன. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக நான் இருந்த போது, உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரச்சினையில் அரசியல் தலையீடுகள் இருந்தன. எனினும் நான் உறுதியாக இருந்தேன்.
இருந்த போதும் நாமும் பல தோல்விகளுக்கு பொறுப்பாக இருந்துள்ளோம். உதாரணமாக முல்லைத்தீவு, ஆனையிறவு, மாங்குளம் போன்றன சில. எனவே நாம் அரசியல்வாதிகளை மட்டும் குறை கூறமுடியாது.
இராணுவத்தில் வீரர்களை புதிதாக சேர்ப்பதில் நாம் வெற்றிகண்டு வருகின்றோம். இந்த வருட ஆரம்பத்தில் நாம் 10,000 வீரர்களை புதிதாக சேர்த்துள்ளோம். முன்பு ஒரு வருடத்திற்கு 3,500 வீரர்களையே சேர்க்க முடியும். இந்த வருட இறுதியில் நாம் மேலும் 7,000 - 8,000 வீரர்களை சேர்க்க முடியும் என நம்புகின்றோம். எனவே இந்த வருடத்தில் நாம் 20,000 புதிய வீரர்களை சேர்க்க முடியும்.
இராணுவத்தில் இருந்து தப்பி ஓடுவோரினது எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளது. முன்பு வருடத்திற்கு 3000 - 5000 வீரர்கள் தப்பி ஓடுவது வழமை. தற்போது அது குறைந்துள்ளது. மேலும் தப்பி ஓடியவர்களில் 2,500 பேர் மீண்டும் படையில் இணைந்துள்ளனர்.
நாம் இந்த போரை ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் முடிக்க வேண்டும். ஒரு நல்ல நிலையில் உள்ள இராணுவத்தை நாம் கொண்டிருந்க வேண்டும். எமக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளன. உதாரணமாக இந்த வருடம் நாம் 250 கவச வாகனங்களை கொள்வனவு செய்துள்ளோம் என்றார் சரத் பொன்சேகா.
மூலம்: புதினம்
Tuesday, June 05, 2007
யாழ். குடாவை கைப்பற்ற புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும்: சரத் பொன்சேகா.!!
Tuesday, June 05, 2007
2 comments
Subscribe to:
Post Comments (Atom)






பதில் அறிக்கை விடும் வழக்கம் புலிகளிடம் இல்லை. செயல் முதல் பிறகே பேச்சு இதுதான் புலிகளின் ஸ்ரைல் புலி பாய்ந்த பின் தெரியும் அதன் பலமும் அதன் மவுனமும்.
ReplyDeleteநல்லவேளை, பொன்சேகா புலிகளைக் காப்பாற்றிவிட்டார். இல்லாவிட்டால் புலிகள் வந்து, அடிவாங்கி, அழிஞ்சு. இதெல்லாம் தேவையில்லையென்று அவர் நினைக்கிறாராக்கும்.
ReplyDelete