Wednesday, June 13, 2007

யாழ் குடநாட்டுக்குச் சென்ற சரத்பொன்சேகா படைத்தளபதிகளுடன் ஆலோசனை.!!

[புதன்கிழமை, 13 யூன் 2007]


சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று யாழ்ப்பாணம் சென்று இராணுவத் தளபதிகளுடன் முக்கிய சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
சரத் பொன்சேகா அவசர பயணமாக நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சென்று அங்கு நிலைகொண்டுள்ள 51, 52, 53, 55 ஆம் ஆகிய டிவிசன்களின் தளபதிகளையும் பிரிக்கேட்களின் தளபதிகளையும் சந்தித்து முக்கிய திட்டமிடல்களை வகுத்துள்ளார்.

தாக்குதல் மற்றும் பாதுகாப்புத்திட்டங்களை தளபதிகளுக்கு சரத் பொன்சேகா அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள இராணுவத்தினரின் நிலைப்பாடுகள் குறித்தும் அதில் ஆராயப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் கவசத்தாக்குதல் கொமாண்டோப் பிரிவின் 3 ஆவது அணியை சிறிலங்கா இராணுவம் வரணிப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த புதிய தாக்குதல் அணிக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அதிக பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது தென்மராட்சி வரணி இடைக்காட்டுப்பகுதியில் இந்த கவசத்தாக்குதல் கொமாண்டோக்களின் பிரிக்கேட்டின் 3 ஆவது பட்டாலியன் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கவசப்படைப்பிரிவு தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்.எம்.டி.ஏ.ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியால் யாழ்ப்பாணக் களமுனைக்காகவே இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள கவசத்தாக்குதல் ஊர்திகள் கடந்த ஓக்ரோபரில் விடுதலைப் புலிககளின் தாக்குதலில் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.