Wednesday, June 13, 2007

அனைத்துலக வல்லுநர் குழு அறிக்கையை "கவனமாக ஆராய" மகிந்த உத்தரவு.!

[புதன்கிழமை, 13 யூன் 2007]

ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வெளியிடப்பட்டுள்ள அனைத்துலக வல்லுநர் குழு அறிக்கையை "கவனமாக ஆராய" சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பேச்சாளர் லூசியன் ராஜ கருணாநாயக்க, அனைத்துலக வல்லுநர் குழுவினர் தெரிவித்த கருத்துகள், கவலைகள், பரிந்துரைகள் ஆகியவை குறித்து கவனமாக ஆராய மகிந்த உத்தரவிட்டுள்ளார் என்றார்.

16 வழக்குகளின் விசாரணைகளுக்காக சிறிலங்கா அரச தலைவர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் செயற்பாடுகளை கண்காணிக்க இந்திய ஓய்வு பெற்ற நீதிபதி பகவதி தலைமையில் 11 பேர் கொண்ட அனைத்துலக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

சிறிலங்கா அரச தலைவர் ஆணையம் செயலற்றது என்றும் அனைத்துலக விதிகளைப் பின்பற்றவில்லை என்றும் தனது முதலாவது இடைக்கால அறிக்கையில் அனைத்துலக வல்லுநர் குழு கடுமையாகச் சாடியிருந்தது.

அனைத்துலக வல்லுநர்க் உழுவில் இடம்பெற்றுள்ள பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பெர்னார்ட் கௌச்னெரும் விசாரணைகளில் உரிய முன்னேற்றத்தை வெளிப்படுத்தா விட்டால் சிறிலங்காவுக்கு பிரச்சினைகள் ஏற்படும் என்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.