Wednesday, June 13, 2007

தமிழக அகதிமுகாம்களில் தங்கியிருந்த 2500 இலங்கையர்களைக் காணவில்லை.!

[புதன்கிழமை, 13 யூன் 2007] உளவுப் பிரிவு பொலிஸார் அதிர்ச்சி தமிழகத்திலுள்ள பல்வேறு அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தமிழ்நாடு உளவுப் பிரிவு பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தற்போது 19 ஆயிரத்து 200 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் இவர்களில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உளவுப் பிரிவு பொலிஸாரின் கவனயீனமே இவ்வாறு அகதிகள் காணாமல்போயுள்ளமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம், திருச்சி, கொட்டப்பட்டுஆகிய அகதிமுகாம்களிலேயே அதிகளவான இலங்கையர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சிறிய அளவிலுள்ள 105 முகாம்களிலும் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த அகதிமுகாம்களிலிருந்து வெளியே செல்லும் அகதிகளைக் கண்காணிக்க தனிப்பிரிவு மற்றும் உளவுப் பிரிவு பொலி ஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, மேற்படி 2 ஆயிரத்து 500 பேர் கானாமல்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் கவனயீனமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதேவேளை, அகதிகள் படகுகளில் இலங்கை செல்வதும் அங்கிருந்து அகதிகள் என்ற போர்வையில் விடுதலைப்புலிகள் தமிழகக் கடற்கரை பகுதிகளில் நடமாடுவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுவருவதாகவும் ஆயுதங்கள் தயாரிக்கும் பொருட்கள், மருந்துகள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உளவுப் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆயிரக்கணக்கில் அகதிகள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை. நிவாரண நிதி மற்றும் இலவச வீடு போன்ற சலுகைகளை கூறி இலங்கையை சேர்ந்த சிலர் இவர்களை அழைத்து செல்கின்றனர். அவர்கள் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களா? என்பது எங்களுக்குத் தெரியாது. எங்கிருந்து அகதிகளாக வந்தார்களோ, அதே நாட்டுக்குத்தான் அவர்கள் திரும்பி செல்கின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.