[ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நோர்வேயின் வெளிவிவகார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது நோர்வேயின் வெளிவிவகார, அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் மற்றும் நோர்வேயின் அதிகாரிகர் மூவரையும் கடந்த வாரம் சந்தித்த போது மகிந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கும், சொல்ஹெய்முக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
இச்சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளை நோர்வே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். எனினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
பேச்சுக்கள் தொடர்பாகவோ அல்லது வேறு விடயங்கள் தொடர்பாகவோ எந்த முடிவுகள் வெளிவந்தாலும் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே வரவேண்டும். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் இருந்தோ அல்லது கடற்புலிகளின் தளபதி சூசையிடம் இருந்தோ அல்ல.
தனது அமைப்பின் சார்பில் பிரபாகரன் மட்டுமே உண்மையைப் பேச முடியும். அவரிடம் இருந்து எமக்கு உறுதிமொழிகள் தேவை என்றார் அவர்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, கேகலிய ரம்புக்வெல, சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான ஈபிடிபியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன ஆகியோர் பங்குபற்றினர்.
மேலும் சொல்ஹெய்முடனான தனிப்பட்ட சந்திப்பொன்றையும் மகிந்த மேற்கொண்டதாகவும், அது 15 நிமிடங்கள் வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்: புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.