[ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007]
இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொறிசோன் - 02 எனப்படும் ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த வானூர்தித்தொகுதிகளை சிறிலங்கா அரசு பரிசோதனைகளை மேற்கொள்ளாது, வேறு விநியோகஸ்தர்களிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை கோராது கொள்வனவு செய்ய முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த வானூர்திகள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான முனிந்திரதாச சுகவீனம் காரணமாக இஸ்ரேலில் மரணமாகியிருந்தார்.
முனிந்திரதாச ஆளிலில்லாத உளவு வானூர்திகள் தொடர்பான தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.