சிறிலங்கா அரசுக்கு உதவும் வகையில் இந்திய மத்திய அரசு பாக்கு நீரிணையில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சுற்றுக்காவல் பணிகளை மேற்கொண்டு வரும் அதேசமயம் தமிழ் நாட்டுக் கரையோரங்களில் புதிய வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பொருத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடல் சுற்றுக்காவல்களை அதிகரிப்பது, புதிய ராடார்களை நிறுவுவது, தமிழ்நாட்டு கரையோரங்களில் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை பொருத்துவது என்பது தொடர்பாக இந்தியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்புக்கூட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் நடைபெற்ற சில தினங்களில் இந்தியாவின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி தலமையில் மற்றுமொரு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் கிழக்குப் பிராந்திய தலைமையகமான அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாக்கு நீரிணையில் மேலதிகமான பீரங்கிக் கப்பல்களை சுற்றுக்காவலில் ஈடுபடுத்துவது தொடர்பாக கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு உதவும் பொருட்டு இந்திய மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் இந்த பலப்படுத்தல்களின் ஓரங்கமாக இராமேஸ்வரம் கரையோரங்களில் வான்படையின் 8 ராடார் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 4 புதிய வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இதனிடையே வங்காளா விரிகுடா, பாக்குநீரிணை, மன்னார் வளைகுடா போன்ற கடற்பகுதிகளில் இந்தியா 6 போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதுடன், ஆளில்லாத உளவு வானூர்திகள் பலவற்றையும் பாக்குநீரிணையின் மேலாக சுற்றுக்காவலில் ஈடுபடுத்தி வருகின்றது.
மேலும் இந்தியா கடற்படையினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பாக்கு நீரிணையில் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.