Wednesday, June 06, 2007

சிறிலங்காவின் செலுத்தப்படாத கடன் தொகை ரூ 34.7 பில்லியன்: விமல் வீரவன்ச.!!

[புதன்கிழமை, 6 யூன் 2007]


சிறிலங்காவின் செலுத்தப்படாமல் உள்ள கடன் தொகை ரூ 34.7 பில்லியன் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச சாடியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

நாட்டின் வாழ்க்கைச் செலவீனத்தைக் கட்டுப்படுத்த மகிந்த அரசாங்கம் தவறிவிட்டது. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகளும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டன. 1977 இல் 5 வீதமாக இருந்த பணவீக்க வீதம் இப்போது 20 வீதமாக உள்ளது.

பண மதிப்பு வீழ்ச்சியடையும்போது அரசாங்கத்தின் கடன் தொகை அதிகரிக்கும். தற்போது 34.7 பில்லியன் ரூபாய் கடன் செலுத்தப்படாமல் உள்ளது. அரசாங்கத்தின் வருவாயில் ஏற்கெனவே 28 வீத அளவு வட்டித்தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலைமை நீடித்தால் அரசாங்கத்தின் சொத்துக்களை விற்பனை செய்துகொண்டிருக்க வேண்டியதாகும்.

தாராள மயமாக்கல் சந்தைப் பொருளாதாரமானது மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து அக்கறை செலுத்தத் தவறிவிட்டது. மக்கள் நீண்ட காலம் அமைதி காக்க மாட்டார்கள். யுத்தத்தின் பெயரால் தங்கள் மீது பொருளாதாரச் சுமைகள் சுமத்தப்படுவதை மக்கள் உணரும்போது அரசியல்வாதிகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது இயற்கையானதாகும் என்றார் விமல் வீரவன்ச.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.