Wednesday, June 06, 2007

விளாத்திக்குள மோதலில் 80 படையினர் கொல்லப்பட்டனர்: கொழும்பு ஊடகம்.!!

[புதன்கிழமை, 6 யூன் 2007]


வவுனியா - மன்னார் எல்லையில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் நடைபெற்ற சமரில் 80-க்கும் அதிகமான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கொழும்பு வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை வெளிவந்த அதன் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் 30 படையினர் கொல்லப்பட்டதாகவும், 15 சடலங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

எனினும் சில உறுதி செய்யப்படாத தகவல்களின் படி மேலும் 40 படையினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த மோதலில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 80-க்கும் அதிகமாக இருக்கலாம்.

கருணா குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட பிளவினால் அக்குழு பலவீனமடைந்துள்ளது. கருணாவுடன் தற்போது 300 பேரே உள்ளனர்.

அவர்களில் 180 பேர் 18 வயதிற்கும் குறைந்த வயதினை உடைய சிறார்கள் என்று அந்த கொழும்பு ஊடகத்தின் பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.