Sunday, June 03, 2007

சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்கள் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு.!!

[ஞாயிற்றுக்கிழமை, 3 யூன் 2007]

சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. வழமையாக சீனாவின் நொறின்கோ (Chinals North Industries Corporation ) நிறுவனத்திடம் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு தற்பொழுது அதனை நிறுத்தி சீனாவின் பொலி ரெக்னோலொஜி (Poly Technologies) நிறுவனத்தினம் இவ் ஆயுதக் கொள்வனவுக்கான உடன்படிக்கையைச் செய்துள்ளது.

ஏற்கனவே நொறின்கோ நிறுவனத்திற்கு 2200 கோடி ரூபாக்கள் கொடுக்க வேண்டிய நிலையில் பிறிதொரு நிறுவனமான பொலி ரெக்னோலொஜியிடம் 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

முதலில் 25 வீதமான தொகையை வழங்குவதோடு பின்னர் பத்து காலாண்டு தவணை அடிப்படையில் முழு பணத்தினையும் செலுத்த வேண்டும்.

கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள்

1. 120 mm ஆட்டிலறிக்குரிய 70 ஆயிரம் எறிகணைகள்


2. 152 mm ஆட்டிலறிக்குரிய 68 ஆயிரம் எறிகணைகள் (220 கோடி ரூபாக்கள்)

3. 81mm மோட்டாருக்குரிய 50 ஆயிரம் எறிகணைகள் (37 கோடி ரூபாக்கள்)

4. 14.5 mm துப்பாக்கிக்குரிய 1 இலட்சம் கனோன் ரவைகள்

5. ஆர்.பி.ஜி உந்துகணைகள் 2 ஆயிரம்

6. J.Y.11 ரக 3D ராடார்கள் (55 கோடி ரூபாக்கள்)

7. 14.5 mm 82 ரக துப்பாகிகள் 50

8. 12.7 mm 85 ரக துப்பாக்கிகள் 200

9. 7.62 mm பல்குழல் துப்பாக்கிகள் 200

10. 7.62 mm 56 ரக துப்பாக்கிகள் 1000


மூலம்: பதிவு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.