[ஞாயிற்றுக்கிழமை, 3 யூன் 2007]
சிறிலங்கா அரசின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோருக்கு இடையில் உருவாகிய மோதல்கள் உச்சநிலையை அடைந்திருப்பதாகவும், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு தப்பிச்செல்ல முயன்ற பிள்ளையான் அணியைச் சேர்ந்த 75 பேர் கருணா குழுவினரால் பணயமாகப் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிள்ளையான் அணியினரின் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் மீது கருணா அணியினர் கடுமையான வன்முறைகளில் இறங்கியிருப்பதாக தமது பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒருவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவித்தாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிள்ளையான் அணியைச் சேர்ந்த 75 உறுப்பினர்கள் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் உள்ள கருணா அணியினரின் வதை முகாம்களில் தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிள்ளையானுடன் இணைந்து கொள்வதற்காக திருகோணமலை நோக்கிச்சென்ற போதே பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் கருணாவின் முகாம்களிலிருந்து வெளியேறி திருகோணமலையில் பிள்ளையானுடன் தங்கியுள்ள பிள்ளையான் அணி உறுப்பினர்களின் தாய்மார், மனைவிமார் என 30-க்கும் மேற்பட்ட பெண்களையும் கருணா அணியினர் பிடித்துச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிள்ளையானின் நெருங்கிய சகாவான சீலனின் மனைவி, அவரது ஒரு வயது நிரம்பிய குழந்தை, மனைவியின் தாயார் ஆகியோரும் கருணா அணியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பிள்ளையானுடன் திருகோணமலையில் தங்கியுள்ள சீலன் மட்டக்களப்பு வந்து கருணா அணியினரிடம் சரணடைந்தால் மட்டுமே அவரது குடும்ப உறுப்பினர்களை விடுவிக்க முடியும் என கருணா அணியினர் நிபந்தனைகளையும் விதித்துள்ளனர். கருணா அணியின் முக்கிய உறுப்பினராக இருந்த சீலன், பிளவைத் தொடர்ந்து திருகோணமலை சென்று பிள்ளையானுடன் இணைந்து கொண்டார்.
பிடித்துச் செல்லப்பட்டுள்ள பிள்ளையான் அணி உறுப்பினர்கள் மட்டக்களப்பில் உள்ள கோவிந்தன் வீதி, அக்கரைப்பற்று, வாகரை பகுதிகளில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் பெருமளவான உறுப்பினர்கள் வாகரை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, June 03, 2007
உச்சநிலையில் பிள்ளையான் - கருணா மோதல்: பிள்ளையானின் சகாக்கள் 75 பேர் கருணா வசம்.!!
Sunday, June 03, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.