Wednesday, June 20, 2007

உலகில் 25 ஆவது மோசமான நாடு சிறிலங்கா.!!

[புதன்கிழமை, 20 யூன் 2007] 2007 ஆம் ஆண்டு உலகில் தோல்வியடைந்த நாடுகளில் சிறிலங்கா 25 ஆவது இடத்தில் உள்ளது. "வெளிவிவகாரக் கொள்கை" இதழ் நிறுவனமும் அமைதிக்கான நிதி அமைப்பும் இணைந்து அனைத்துலக நாடுகள் தொடர்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன. அகதிகள், இடம்பெயர்ந்தோர், பொருளாதாரம், மனித உரிமைகள், பாதுகாப்பு நிலைமைகள், நகர்ப்புற அபிவிருத்தி, பொதுசேவைகள் உள்ளிட்ட 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் மதிப்பிடப்பட்டன. மொத்தம் 117 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முதலிடத்தில் சூடான் நாடு (113.7புள்ளிகள்) உள்ளது. இரண்டாம் இடத்தில் ஈராக் (111.4) உள்ளது. உலகிலேயே மிக மோசமான- தோல்வியடைந்த நாடாக சூடான் உள்ளது. சோமாலியாவும், சிம்பாவேயும் தோல்வியடைந்த நாடுகளின் வரிசையில் 3 மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளன. யேமன் 93.2 புள்ளிகளையும் சிறிலங்கா 93.1 புள்ளிகளையும் பெற்றுள்ளன. தோல்வியடைந்த நாடுகளின் வரிசையில் சிறிலங்காவுக்கு 20ஆம் இடம் கிடைத்துள்ளது. ஹங்கோ, லைபீரியா, லெபனான், மலாவி, ருவாண்டா, சிரியா, கம்போடியா, அங்கோலா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை ஒப்பிடுகையில் சிறிலங்கா மிக மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.