[செவ்வாய்க்கிழமை, 22 மே 2007] சிறிலங்கா மக்கள் அதிகரித்துள்ள இனப்பாகுபாட்டை உணரத்தவறிவிட்டனர், அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளுக்கு தமது பங்களிப்பை நல்கவேண்டும் என்று நோபல் பரிசில் பெற்ற பேராசிரியர் அமர்த்யா சென் தெரிவித்துள்ளார். நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற விரிவுரை ஒன்றின் போதான கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில்: சிறிலங்காவில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்தது. எனவே அந்த நாட்டின் மக்கள் அமைதி முயற்சிகளிலும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஆனால் புத்தமதம், சிங்கள இனம் போன்றவற்றை முதன்மைப்படுத்துவதால் அதன் தேசிய அடையாளப்படுத்துதலில் இருந்து மற்றய சமூகங்கள் வேறுபட்டு உள்ளன. தற்போது அது மீண்டும் தனது நிலைக்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் அற்றுப்போயுள்ளன. சிறிலங்காவானது அதிகரித்துள்ள தனது இனப்பாகுபாட்டை உணரத்தவறி விட்டது என்றார் அவர் கேம்பிரிட்ச் மற்றும் ஹவாட் பல்கலைக்கழகங்களின் பேராசிரியரான அமட்யா சென் நோர்வே ஒஸ்லோவில் உள்ள நோபல் நிறுவனத்தில் 'வறுமை, போர், சமாதானம்' என்னும் தலைப்பில் விரிவுரை ஒன்றை வழங்கியிருந்தார். நோர்வேயின் முடிக்குரிய இளவரசர் உட்பட பெருமளவான புத்திஜீவிகள் கலந்து கொண்டனர். பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக ஆற்றிய பணிகளுக்காக பேராசிரியர் சென்னுக்கு 1998 ஆம் ஆண்டு நோபல் பரிசில் வழங்கப்பட்டிருந்தது.
Tuesday, May 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.