Friday, May 25, 2007

மட்டக்களப்பிற்கு பாலித கோஹன விஜயம்.

[வெள்ளிக்கிழமை, 25 மே 2007]

இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் செயலாளர் நாயகமும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான கலாநிதி பாலித்த கோஹன அவர்கள் வெள்ளிகிழமையன்று மட்டக்களப்பிற்கான விஜயமொன்றை
மேற்கொண்டிருந்தார்.

சமய, சமூக பிரமுகர்கள். ஐ.நா அமைப்புகளின் பிரதிநிதிகள், போர் நிறுத்த கண்காணிப்புக் குழு, சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலவேறு தரப்பினரை சந்தித்து உரையாடிய பாலித்த கோஹன, இடம் பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றம் அவர்களுக்கான நிவாரண உதவிகள், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கேட்டறிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக சமாதானத்திற்கான பல்சமய ஒன்றியத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கிழக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்றததை தான் வலியுறுத்தியதாகக் மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கூறுகிறார். அதன் போது அடுத்த மாதத்திற்குள் மீள் குடியேற்றம் பூர்த்தியடைந்து விடும் என்ற உத்தரவாதம் தரப்பிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
BBC

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.