Friday, May 25, 2007

வன்னிக்கான போக்குவரத்து தொடர்ந்து ஸ்தம்பிதம் ஐ.சி.ஆர்.சி. பிரதிநிதிகள் வன்னியில் பேச்சுவார்த்தை.!!

[வெள்ளிக்கிழமை, 25 மே 2007]

வன்னிக்கான அனைத்து தரைவழிப் பாதைகளும் நேற்று வியாழக்கிழமையும் மூடப்பட்டிருந்தன.

ஓமந்தை மற்றும் உயிலங்குளம் இராணுவ சோதனை நிலையங்களை அண்டிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தற்காலிகமாக விலகியுள்ளதையடுத்து சோதனை நிலையங்கள் திறக்கப்படாததால் வன்னிக்கான வீதிகள் மூடப்பட்டுள்ளன.

மேற்படி சோதனை நிலையங்களில் பணியாற்றும் ஐ.சி.ஆர்.சி. யினரின் பாதுகாப்பு தொடர்பாக இரு தரப்பும் உறுதியான உத்தரவாதங்களை வழங்க வேண்டுமென ஐ.சி.ஆர்.சி. கோரி வருகின்றது.

இது குறித்து ஐ.சி.ஆர்.சி. யினர் விடுதலைப் புலிகளுடன் தொடர்ந்தும் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கான ஐ.சி.ஆர்.சி. யின் வதிவிடப் பிரதிநிதி வன்னியில் புலிகளைச் சந்திக்கச் சென்றிருந்தார்.

பாதுகாப்பு தொடர்பாக இரு தரப்பிடமிருந்தும் திருப்திகரமான பதில் கிடைக்கும் வரை ஐ.சி.ஆர்.சி. பிரதிநிதிகள் பணிக்குத் திரும்பமாட்டார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.