அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இயலாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு பிரித்தானிய நிதி உதவியை இடை நிறுத்தி உள்ளது.
அதேபோல் அமெரிக்காவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை காலை ஊடக நிறுவன ஆசிரியர்கள் மற்றும் நடத்திய சந்திப்பின் போது மகிந்த கூறியதாவது:
நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டங்களை வெளியில் இருந்து விமர்சிப்பவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்து எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள அரசியல் தீர்வு யோசனைகள் இந்நாட்டின் அதிகாரப் பரவலாக்கலுக்கு ஒரு பலமான அத்திவாரமாக இருக்கும்.
நாட்டின் அபிவிருத்திக்காக நாம் எமது சொந்தப் பணத்தை பயன்படுத்துவோம். எமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு அமைப்பில் இருந்தும் உதவி கிடைக்கும் வரை நாம் காத்திருக்க முடியாது.
எமக்கு உரியமுறையில் நிதியுதவி வழங்கப்பட்டால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோம் இன்றேல் நாம் வெளிநாட்டு உதவி குறித்து சிந்திக்காது எமது பணியைச் செய்வோம். நாம் அதில் தங்கியிருக்கவில்லை.
பிரித்தானிய அரசாங்கத்தின் உதவி நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது இலங்கைக்கான ஆழிப்பேரலைக்குப் பின்னரான உதவி பற்றியதாகவே இருக்க முடியும்.
உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. கிழக்கில் பல இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. ஆனால் அதன் உண்மையான தொகை மிகவும் குறைவானது என தற்போது தெரியவந்திருக்கிறது. இவர்களை மீளக் குடியமர்த்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணம் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருந்தமையும் மீள்குடியமர்த்துகைக்கு முன்னர் தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டியிருந்தமையுமாகும்.
இன்று மீள் குடியமர்த்துகைக்காக நாம் எமது சொந்தப் பணத்தை பயன்படுத்துகிறோம். அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் வரும்வரை நாம் காத்திருக்கவில்லை. இப்பணி வெற்றிகரமாக நடைபெறுகிறது. மீள் குடியமர்த்தப்படும் மக்களுக்கு நாம் மின்சாரம் வழங்கி வருகிறோம். இப்பகுதிகளில் புதிய பாதைகள் அமைக்கப்படுகின்றன. இவையே தாமதத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவை ஊடகங்களில் வெளிவருவதில்லை.
வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு எந்த பாரபட்சமும் காட்டப்படாது இப்பணி நடைபெற வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படல் வேண்டும்.
ஆழிப்பேரலையால் இடம் பெயர்ந்தவர்களாக இருக்கட்டும் அல்லது யுத்தத்தினால் இடம் பெயர்நதவர்களாக இருக்கட்டும் அவர்கள் அனைவரையும் மீள்குடியமர்;த்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் வெளியிலிருந்து உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றியே தீருவோம் என்றார் மகிந்த.

என்ன செய்ய பிச்சை எடுக்க இன்னும் கனக்க இருக்கு மகிந்தவுக்கு அதுக்குள்ள இப்படி எல்லாம் அறிக்கை விடுறது ரெம்பதப்பு.??????
ReplyDeleteAFP யிலும் இச் செய்தி வந்துள்ளது.
ReplyDeleteஅநேகமாக இதுதான் 2007 இன் மெகா நகைச்சுவையாக இருக்கும்.
இது நகைச்சுவையான விடயமே அல்ல.
ReplyDeleteஇப்படி மகிந்த துணிந்து கூறுகின்றார் என்றால், அதற்குப் பின்புலத்தில் ஒரு சக்தி உதவி செய்யத் தயாராக இருக்கின்றது என்பதே அர்த்தம். அது நன்கொடை என்றபெயரில் இரகசியமாகப் பணஉதவி செய்யக் கூடும். அரச கணக்கில் அது வெளிநாட்டு உதவிகள் என்று மட்டுமே இடம்பெறலாம். நாட்டின் பெயர் மறைக்கப்படலாம்.
எனவே, ஒரு பக்கம் நிதி உதவிகள் நிறுத்தப்பட்டது மகிழ்்ச்சி தந்தாலும், அது நிரந்தரமான நிறுத்தி வைத்தல் அல்ல என்று பொருள் அல்ல. அதற்காக நாம் நிறைய உழைக்க வேண்டும்.