[வியாழக்கிழமை, 17 மே 2007] யாழ். கல்விச் சமூக செயற்பாடுகள் மீளத் தொடங்கப்பட வேண்டுமாயின் கடத்தப்பட்ட மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று யாழ். ஆயர். தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் வலியுறுத்தியுள்ளார். யாழில் அமைதிக்கான மக்கள் குழு பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தின் யாழ். தளபதி ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையே நேற்று புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நடந்த சந்திப்பின் போது இது வலியுறுத்தப்பட்டது. இரு மணித்தியாலங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் பி.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் எஸ்.பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். யாழ். குடாநாட்டில் 4 பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் கடத்தப்பட்டமை குறித்தும் யாழ். பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், பாடசாலை அதிபர்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. "கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாது விடின் நிலைமை மோசமடையும்" என்றும் ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் அடிகளார், சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் தெரிவித்தார்.
Thursday, May 17, 2007
மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: யாழ். ஆயர் வலியுறுத்தல்.!!
Thursday, May 17, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.