Thursday, May 24, 2007

இன்றைய குண்டு வெடிப்புக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை - இளந்திரையன்.!!

[வியாழக்கிழமை, 24 மே 2007]


கொழும்புத்துறைமுகத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துரைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன்...

சிறீலங்கா அரசாங்கமும் அரச படைகளும் விடுதலைப் புலிகளால் தான் இக்குண்டு வெடிப்பை நடத்தியுயுள்ளார்கள் என தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முப்படைகளும் வளச்சியடைந்த நிலையில் குறிப்பாக வான்படைகள் சிறீலங்கா படைத்துறையுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது மிகவும் துல்லியமாக தாக்குதலைத் நடத்தும் போது இவ்வாறான சில்லறைத் தனமாக குண்டுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தவேண்டிய தேவை இல்லை. அவ்வாறு நாங்களும் இல்லை எனவும் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் அழுத்ததிருத்மாகத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அரசாக இயங்கி வருகின்றோம். இதை அவர்கள் மாற்றிக் காண்பிப்பதற்காக, திரித்துக் கூறி சர்வதேசத்தில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தவே விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடுகிறார்கள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.